மற்றவை
வகைப்படுத்தாத பதிவுகள்.
சத்யராஜ்குமார் பற்றி
சத்யராஜ்குமார் உங்கள் சொந்தப் பெயரா, புனைபெயரா?
அம்மா அப்பா வைத்த பெயர்தான். பின்னாளில் சத்யராஜ் என்ற பெயரில் ஒரு நடிகர் பிரபலமடைந்ததாலும், எழுத்தாளர்கள் பலர் குமார் அல்லது குமாரனை பெயரின் பிற்பகுதியில் புனைந்து கொள்ள ஆரம்பித்ததாலும், எழுத்துலகம் வழியாக நண்பர்களைச் சந்திக்கும்போது இந்தக் கேள்வியையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
எவ்வளவு காலமாய்க் கதை எழுதுகிறீர்கள் ?
என்னுடைய 19 வயதிலிருந்து சுமார் 24 வயது வரை பத்திரிகைகளில் நிறைய எழுதினேன். கடந்த பல வருடங்களாக எழுதுவதில்லை.
