சத்யராஜ்குமார்
எழுதியவை
சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

 
விகடன்
ஆனந்த விகடனில் வெளியான படைப்புகள்.

தேய்பிறைகள்

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 10.05.1998

” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.

ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.

” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா காட்டியிருக்கார்.

எவ்ளோவ் பெரிய கட்டிடம் ! ஒரே மாதிரி டிரஸ் போட்டு அக்கா, அண்ணா எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டிருந்தாங்க.

“ஸார், நாம போயாகணும்”

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 08.09.1996

மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது.

ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். ” தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை விழுந்துருச்சுங்க. அரை மணி நேரமா உயிருக்குப் போராடுது. ஆஸ்பத்திரில விட்டுருங்கய்யா… “

வரது ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டே, ” நாங்க அவசரமா போயிட்டிருக்கோம். வேற வண்டி பாருங்க. “